Monday 10 August 2015

சமூக வலைதளத்தினால் பெருகும் குற்றங்கள், வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஜிகினா


இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரின் வாழ்க்கையிலும் பெரும் பங்கை பெற்றுள்ளன சமூக வலைத்தளங்கள் ஆம் இன்றைய தலைமுறையினர் அன்றாடம் சாப்பிடுகிறார்களோ இல்லையோ தினமும் மறக்காமல் சமூக வலைதளங்களில் தங்கள் பதிவு மற்றும் கருத்துக்களை பதிவு செய்துகொண்டும் மற்றவர் பதிவினை தெரிந்துகொண்டும் இருக்கின்றனர். இவ்வாறு பல நல்ல விஷயங்கள் இருப்பினும் சில குற்றங்களும் இவைகளின் மூலம் நடந்துகொண்டு தான் இருக்கின்றன அப்படி பட்ட குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் 'ஜிகினா'.

இப்படத்தினை வெளியிடுகிறது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். சென்ற ஆண்டு இவர்கள் வெளியிட்ட கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை படங்கள் பெரும் வெற்றியினை பெற்றன, இதற்கு காரணம் இந்நிறுவனம் தரமான படங்களை வெளியிடுவது தான் அது போல ஜிகினா படமும் பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்க படுகிறது. 

இப்படத்தினை பற்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி கூறுகையில், 'ஜிகினா' இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும்.பெருகி வரும் சமூக வலை தள குற்றங்களைப் பற்றியும், அதன் வாயிலாக பெருகும் குற்றத்தை பற்றியும் ,அறிமுகம் இல்லா காதல் ஏற்படத்தும் விளைவுகளையும், மிகவும் ஜனரஞ்சகமாக இன்றைய இளைஞர்களின் மன நிலையை தெள்ள தெளிவாக படம் எடுத்து காட்டி இருக்கிறார் எனது நண்பரும் இயக்குனரான ரவி நந்தா பெரியசாமி.

எனது நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களின் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும் அதை சரி வர இயக்கும் இயக்குனர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது.'ஜிகினா' படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய் வசந்த். அவர் இந்த பாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய அளவுக்கு யாரேனும் பொருந்தி இருப்பார்களா என்பது எனக்கு தெரியாது.அவரது ஜோடியாக அறிமுகம் ஆகிறார் சானியா தாரா.சிங்கம் புலி, ரவி மரியா,' கும்கி' அஷ்வின் , 'டாடி' செந்தில், சுகு வெங்கட், குட்டி ஸ்ரீதேவி, மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.புதிய இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஷ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார் . முன்னாள் பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகனும் ஒளிப்பதிவாளருமான பாலாஜி ரங்கா இந்த படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணாவின் பட தொகுப்பில் உருவான ' ஜிகினா' பெரும் எதிர்பார்ப்பு கிடையே வரும் 21 ஆம் தேதி வெளி வர உள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...