Saturday 29 August 2015

நடிகர் ஜீவா பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் கவலை வேண்டாம்

ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் தற்போது தயாரித்து கொண்டிருக்கும்  'கோ 2' படத்தை தொடர்ந்து ஜீவா, பாபி சிம்மா இணைந்து நடிக்கும் 'கவலை வேண்டாம்', படத்தையும் தயாரிக்க உள்ளனர்.  

யாமிருக்க பயமே வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகும் படம்   'கவலை வேண்டாம்'. இந்தபடத்திற்கு ஜீவாவிற்கு ஜோடியாக நடிப்பதற்கு தேர்வில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த பட நிறுவனத்தினர் இப்போது நாயகியாக காஜல் அகர்வாலை தேர்வு செய்து உள்ளனர்.

இதைப் பற்றி இயக்குனர் டிகே கூறும் போது ' ஜீவா சாரும் சரி, காஜல் அகர்வாலும் சரி நான் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும் போதே நல்ல பழக்கம். கதை கரு உருவானதுடன் ஜீவா சார் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்துக் கொண்டாலும் , முழுக் கதை முடிவடையும் வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.

இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும் வகையில், நான் எதிர் பார்க்கும் நடிப்பை உடல் மொழியாலும் , உணர்வாலும் வெளி படுத்த வேண்டியவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சி அமைப்புகள் மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான் நடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். வெகு விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது' என்று இப்படத்தின் இயக்குனர் டி கே கூறியுள்ளார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...