Friday 28 August 2015

ஆஸ்காருக்கு செல்லும் காக்க முட்டை


தனுஷ், வெற்றிமாறன் தயாரித்து மணிகண்டம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியை தழுவிய ‘காக்கா முட்டை’ படம் விருதுகள் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் முதலிடத்தை பிடித்திருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். 

இப்படம் வெளியாவதற்கு முன்பே தேசிய விருது மட்டும் இல்லாமல் பல விருதுகள் பெற்றது இதனால் ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் வசூலை அள்ளியுள்ளது என்று கூறலாம்.

இந்த வருடம் ஆஸ்கர் விருதிற்கு தற்போது இந்தியாவில் இருந்து படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஆஸ்கர் ரேஸில் முதலில் இருப்பது ‘காக்கா முட்டை’ மற்றும் ‘பாகுபலி’ படங்கள் தானாம். மேலும், இதில் அமீர்கானின் ‘பிகே’, ப்ரியங்கா சோப்ராவின் ‘மேரி கேம்’ ஆகிய படங்களும் போட்டியில் உள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...