Tuesday 25 August 2015

பின் வாங்கிய புலி, முந்துகின்றன மற்ற படங்கள்


ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'புலி' படம் இதற்கு முன் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளிவருவதாக இருந்தது. இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இதனால் செப்டம்பர் 17ஆம் தேதியை முற்றுகையிட காத்திருக்கின்றன மற்ற படங்கள்.

அனுஷ்கா, அல்லு அர்ஜுன் நடிப்பில், இளையராஜாவின் இசையில் உருவான "ருத்ரமாதேவி" படம் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ், மனிஷா யாதவ், கயல் ஆனந்தி ஆகியோரின் நடிப்பில் தயாராகி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படமான த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தினையும் அதே நாளில் வெளியிட பேச்சு வார்த்தையில் உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

சரி அன்று எந்தெந்த படங்கள் வெளியாகும் என காத்திருந்து பார்ப்போம்.

புலி படத்தை இயக்கியுள்ளார் சிம்புதேவன். படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளனர் ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா. முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் ஸ்ரீதேவி மற்றும் சுதீப். படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...