Saturday 8 August 2015

வந்தா மல திரைவிமர்சனம்

சேத்துப்பட்டு சேரிப் பகுதியில் வாழும் நான்கு இளைஞர்களின் (தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ்) வேலையே ஹெல்மெட் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தபடி பைக்கில் போய் பெண்களில் கழுத்தில் உள்ள செயினை அறுப்பதுதான். அவர்களை ஜாமீனில் எடுக்கும் பழைய ரவுடியான ஒரு முதியவர் (வியட்நாம் வீடு சுந்தரம்) .

நால்வரில் ஒருவனான தாமா என்பவனைக் காதலிககிற இளம்பெண் வசந்தி (பிரியங்கா ) . அந்த நால்வரின் நண்பனாக இருந்து பிறகு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறுகிற ஒரு திருநங்கை (மலைக்கா ).

திருட்டு நண்பர்கள் நான்கு பெரும் ஒரு நாள் ஒரு டூ வீலர் பெண்ணின் கழுத்து செயினை அறுக்கிறார்கள். அந்த டாலர் தாமா கைக்கு வர , அவன் அதை வசந்திக்குக் கொடுக்கப் போக, ஒரு சண்டையில் அது கீழே விழுந்து திறக்க , அதில் ” என்னைக் காப்பாற்றினால் இரண்டு கோடி ரூபாய் பணம் கிடைக்கும்” என்று எழுதி இருக்கிறது .

அவளைக் கண்டு பிடிக்க , அந்தப் பெண் இவர்களிடம் மிலிட்டரி ஆபீசரான தன் கணவர் நம் நாட்டு ராணுவ ரகசியங்களை 25 கோடி பணத்துக்காக எதிரி நாட்டுக்கு விற்கப் போகிறார் என்றும் அதற்கான அட்வான்ஸ் அவர் பெறும்போது அவர் அந்நியர்களுக்கு கொடுக்க இருக்கும் ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை திருடி தன்னிடம் கொடுத்து விட்டு , அந்த இரண்டு கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று கூறுகிறாள் .

பெரும் பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கே போக , தீவிரவாதிகள் செயின் திருடர்கள் இவர்களில் யார் ஜெயித்தார்கள் என்பதே….

கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன், நவ குமாரன் கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க….தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், பிரியங்கா பழம்பெரும் கதை வசன கர்த்தா இயக்குனர் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் நடிக்க நடிக்க . ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கி இருக்கும் படம் ‘வந்தா மல’.

இரண்டரை மணி நேரம் ஒரு நிஜமான சேரியில் இருந்த உணர்வை அப்படியே தருகிறது படம் .

பராசக்தி ரீமிக்ஸ் பாடலான ‘தேசம் ஞானம் கல்வி’ முதல் அத்தனை பாடல்களும் நேட்டிவிட்டி கலந்த இனிமையோடு மனதை அள்ளுகின்றன. . பின்னணி இசையும் சிறப்பு .படத்துக்கு பலம்.

கடைக்குப் போய் “பூச்சி மருந்து கொடு” என்று கேட்டு செயற்கைக் குளிர்பானத்தைக் குடித்து விட்டு சண்டை போடுவது செம கிண்டல்

“ காதல் என்பது கார்ப்பரேஷன் வாட்டர் மாதிரி . எப்ப வரும்னே தெரியாது. வரும்போது அண்டா , குண்டாவுல எல்லாம் புடிச்சு வச்சிக்கிட்டு , தேவைப்படும்போது எடுத்து செலவு பண்ணிக்கணும் ” போன்றவசனங்களும் ரசிக்க வைக்கிறது.

சேரிப் பெண்ணின் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்து இருக்கிறார் பிரியங்கா. . ஆனால் மொட்டை மாடிக் காட்சியில் அவர் பேசும் வசனங்களும் நண்பன் ஒருவனின் குடிகார அப்பன் பேசும் வசனங்களும் முகம் சுளிக்க வைக்கிறது.

தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் இவர்கள் எல்லாம் கேரக்டருக்காகவே மாறி இருக்கிறார்கள்.

வழக்கறிஞர் தூய தமிழில் பேசுவதை போலீஸ் உட்பட எல்லோரும் கிண்டல் செய்வது போல காட்சிகளும் வசனங்களும் வைத்து இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய விஷயம்

படத்தின் சில காட்சிகளையும் பல காட்சிகளின் நீளங்களையும் நீளமான வசனங்களையும் குறைத்து இருக்கலாம் .

எனினும் சென்னைத் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த வகையில் கவனிக்க வைக்கிறது படம்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...