Monday 10 August 2015

வெளிவருகிறது வாலு, உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்

பல நாட்களாக இழுத்துக்கொண்டு போன வாலு படத்தின் வெளியீட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது ஆம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது 'வாலு'.

சிம்பு கதாநாயகனாக நடிக்க உடன் ஜோடியாக ஹன்சிகா நடிக்க எப்பொழுதோ வெளியீட்டிற்கு தயாரான வாலு திரைப்படம் பல காரணங்களால் தள்ளி போனது குறிப்பிடத்தக்கது மேலும் சிம்புவின் முந்தைய படமான போடா போடி வெளியாகி கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஆக நொந்தே போனார் அவர், மேலும் இரண்டு முறைக்கு மேல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு படம் வெளியாகாததால் பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளானார்.

இருப்பினும் தன் ரசிகர்கள் இன்று வரை தன் மேல் கொண்டுள்ள அன்பினை கண்டு வியந்தே போனார், காரணம் தனது படம் வெளியாகி நீண்ட காலம் ஆனாலும்  சற்றும் மனம் தளராமல் இன்று வரை தன் பக்கமே நிர்க்கனர் அவரின் ரசிகர்கள். இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர் தான் அவர்.

இந்நிலையில் இன்று மாலையில் வாலு படத்தின் வெளியீட்டு தேதி உறுதி படுத்தப்பட்ட செய்தியை சமூக வலைத்தளம் ஒன்றில் பகிர்ந்தார் சிம்பு மேலும் 10 செகண்ட் கொண்ட டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனால் உற்சாகத்தில் உள்ளனர் சிம்புவின் ரசிகர்கள்.

நாளை முதல் வரும் செய்தித்தாழ்களில் படத்தின் போஸ்டர் வெளியீட்டு தேதியுடன் வரும் எனவும் அறிவித்திருந்தார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...