Friday 14 August 2015

ஸ்ரீதேவிக்கு பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து


விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் புலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
இவரது பிறந்த நாளான நேற்று இவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகூரினார் விஜய், மேலும் பூங்கொத்து ஒன்றினை அனுப்பியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி தனது 52வது பிறந்தநாளை இன்று சென்னையில் எளிமையாக கொண்டாடினார்.  நடிகை ஸ்ரீதேவிக்கு, புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் மற்றும் புலி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர் ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா மேலும் படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சுதீப். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...