Thursday 13 August 2015

சிம்புவிற்கு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி


நடிகர் சிம்பு நடித்த வாலு படம் பல தடங்களை கடந்து நாளை வெளிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. வாலு படம் வெளியாக நடிகர் விஜய் உதவினார் எனவும் அவருக்கு நன்றியும் தெரிவித்தது பாராட்டி பேசினார் சிம்புவின் தந்தை டி.ஆர்.

இந்நிலையில் படம் வெளியாகும் சந்தோஷத்தில் இருக்கும் சிம்புவிற்கு மேலும் ஒரு பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் ரஜினி காந்த். ஆம் சிம்புவை அழைத்து படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளாராம் சிம்பு.

வாலு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் ஹன்சிகா மேலும் காமெடியில் கலக்கியுள்ளார் சந்தானம். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...