Tuesday 11 August 2015

மேலும் ஒரு நிறுவனத்திற்கு தூதுவர் ஆகும் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா ஏற்கனவே ஏர்சல் மற்றும் சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருப்பது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் மேலும் ஒரு நிறுவனத்தில் தூதுவராகியுள்ளார் என்று தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஆம் QUICKR, இந்நிறுவனத்திற்கு தான் நடிகர் சூர்யா தூதுவராக உள்ளார் என்கின்றன செய்திகள். மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனத்தின் பெயரை பலரும் அறிந்திருப்பீர்கள், நம் பழைய பொருட்களை எந்த அலைச்சலும் இல்லாமல் இணையத்தின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே வாங்கவும், விற்கவும் உதவியாக இருக்கும் ஒரு இணையதளம் ஆகும்.

மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் 24 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'ஹைக்கூ' எனும் குழந்தைகளை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படத்தில் சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...