Thursday 13 August 2015

காளி இல்ல இப்போ 'கபாலி', மாறியது ரஜினி படத்தின் டைட்டில்


ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். படத்தை பற்றி செய்தி வெளியானது முதல் மிகுந்த குஷியில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். 

இதற்கு முன் படத்திற்கு 'காளி' என பெயரிடபட்டதாக செய்திகள் வெளியாகின ஆனால் அந்த தலைப்பை மாற்ற சொல்லி சூப்பர் ஸ்டார் கேட்டுக்கொண்டதாகவும் அதனால் படத்தின் பெயரை மாற்றியதாகவும் தெரிகிறது. அதன்படி படத்திற்கு தற்பொழுது 'கபாலி' என பெயரிடப்பட்டுள்ளது.

கபாலி படத்தில் ரஜினியுடன் நடிக்கின்றனர் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், மற்றும் பலர்.

படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன், இவர் ரஞ்சித்தின் முந்தைய படங்களான அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி மலேசியாவில் துவங்குகிறது. 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...