Thursday 13 August 2015

ஆகஸ்ட் 20 முதல் புலி டிரைலர்


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலி படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியினை அறிவித்து விட்டார் நடிகர் விஜய். ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று டிரைலரை வெளியிடுவதாக சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டார் அவர்.

இதற்கு முன் வெளியான புலி படத்தின் டீசர் அதிக அளவில் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர் ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா, படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் ஸ்ரீதேவி மற்றும் சுதீப்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத், இவரது பிறந்த நாள் அன்று பாடல் வெளியீடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

படம் செப்டம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...