Tuesday 11 August 2015

13 ஆம் தேதி அன்று 10 என்றதுக்குள்ள டீசர்

ஆண்டிற்கு நூறு படத்திற்கு மேல் வெளியானாலும் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது என்னமோ சில படங்கள் தான் அப்படி தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படங்களில் ஒன்றான '10 என்றதுக்குள்ள' படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் எதிர்பார்ப்பிற்கு காரணம், இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அவர்களின் முந்தைய படமான 'கோலி சோடா' படத்தின் தரமான வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக சமந்தா நடிகின்றார். படத்தினை பெரும் பொருட் செலவில் தயாரிக்கின்றனர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...