Monday 10 August 2015

உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்ட 1021


தன்  தாயின் மறைவிற்கு பின் தன தந்தையுடன் தனியாக வாழும் பெண், பின் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறாள். தன்  தந்தை, சமூகம் மற்றும் தனது காதலனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பல திருப்புமுனைகளுடன் சொல்லும் படம் தான் 1021.  

இப்படத்தினை RDG FILM INTERNATIONAL PTE LTD சார்பாக தினகரன், தி. நகுலன், அ. கோபு ஆகிய மூவரும் தயாரிக்க ஜேம்ஸ் குமார் கதாநாயகனாகவும், ஹேமாலினி கதாநாயகியாகவும் நடிக்க தி. நகுலன், அ. கோபு இவர்களுடன் மற்றும் பல சிங்கப்பூர் நடிகர், நடிகைகள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பை டான் அரவிந்த் மேற்கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தினை இயக்குகிறார் விக்னேஷ் சரவணன்.

வெளிவர தயாராக உள்ள இப்படம் சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, ஊட்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...