Saturday 25 July 2015

VIP 2 படத்தை வேல்ராஜ் இயக்கவில்லை தனுஷ்தான் இயக்குகிறார் - அதிர்ச்சி தகவல்

தனுஷ் தற்போது மாரி படத்தை தொடர்ந்து VIP 2 என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும், ஆனால் இந்த படத்தை இயக்கும் வேல்ராஜ் இப்படத்தை  இயக்கவில்லை தனுஷ் இயக்குகிறார் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கிய போது தான் விஷாலின் பாயும் புலி படத்தையும் தொடங்கியிருந்து  குறிப்பிடத்தக்கது. விஷால் படத்தில் வேல்ராஜ் ஒளிபதிவாலராக பணியாற்றுகிறார் . இதற்க்கு முன் இந்த குழு இணைந்த VIP படத்தில் படத்தில் பாதி படத்தை தனுஷ் இயக்கியிருந்தார் என்ற செய்திகள் வந்துள்ள நிலையில் தற்போது இந்த தகவல்கள் வந்துள்ளது.

 
இச்செய்தி குறித்து வேல்ராஜ், நான் தான் அந்தப் படத்தை இயக்குகிறேன். வெளிவரும் செய்திகள் ஒரு வதந்தி என்றும். ’பாயும் புலி’ படமும், தனுஷ் படமும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் ‘பாயும் புலி’ படப்பிடிப்பில் தொடர்ந்து சில நாட்கள் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தது. தனுஷ் படத்தில் நான் இயக்கத்தை மட்டும் கவனித்துக் கொள்வதால் ஒளிப்பதிவுக்கு நான் இருக்க வேண்டியதில்லை.

எனவே, நான் இல்லாமல் குழுவினர் சில காட்சிகளை படமாக்கினர். இதனால் நான் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என அர்த்தமாகாது. இப்போது படப்பிடிப்பு முடிந்து விட்டது. மற்ற வேலைகள் நடந்து வருகிறது. நான் தான் இன்னும் தனுஷ் படத்தின் இயக்குநர்” என்று தெரிவித்தார்.

தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் நடிக்கிறார் மற்றும் ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் அன்பு செழியன் தயாரிக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...