Monday 27 July 2015

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை (RYA) நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலையற்ற மாணவ, மாணவிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் விதமாக ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை (RYA) சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் ஆகஸ்ட் 2, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


இந்த முகாமில் எச்.சி.எல், மாருதி, நேஷனல் இன்சூரன்ஸ், எச்.டி.எஃப்.சி., சுந்தரம் ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா, லேன்சன், வாசன் கண் மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை உள்ளிட்ட 60 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்கங்களை அமைத்து பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் மேல்நிலைக்கல்வி, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் ஆகிய கல்வித்தகுதிகளுக்குரிய பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


எனவே வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை (RYA) கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய www.ryabookbank.com.

தொலைபேசி :044-25610369, 25610978.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...