Monday 27 July 2015

தவறான வதந்திகளுக்கு முற்றி புள்ளிவைக்கும் சென்னைஸ் அமிர்தா

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வெற்றிகரமாக செயல்படும் ஒரு ஹோட்டல் நிர்வாக கல்விநிலையமாகும். இது சென்னைஸ் அமிர்தா என் பெயரில் சென்னையில் திநகர், தாம்பரம், நந்தனம், பெரம்பூர், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) கிளைகளை கொண்டு செயல்படுகிறது. 

இந்த கல்வி நிலையம் ஹோட்டல் நிர்வாகத்தில் பல்வேறு வகையானபடிப்புகளை கற்றுத்தருகிறது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலை கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரத் சேவாக் சமாஜ், தமிழ்நாட்டில் தமிழகஅரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழிற்கல்வி மேம்பாட்டு நிலையம், மலேசியா திறந்தவெளி பல்கலைக்கழகம், மலேசியா டெய்லர்ஸ் பல்கலைக் கழக கல்லூரி, மலேசியாவில் உள்ள லண்டன் வணிகப்பள்ளி மற்றும் பைனான்ஸ் ஷிப்பில்டு அகாடமி,(ஷிப்பில்டு கல்லூரி ஆஸ்திரேலியா) மலேசியா விருந்தோம்பல் கல்லூரி உள்ளிட்டவை இதில் அடங்கும். தற்போது இந்த கல்வி நிலையத்தில் சுமார் 3500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 

ஏற்கனவே படித்து முடித்த 2000 மாணவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முன்னணி உணவகங்கள், ஐடிசி கிராண்ட் சோழா, தாஜ் கண்ணிமரா, ரெயின்ட்ரீ உள்ளிட்ட முன்னணி ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள எங்களது கிளையில் படித்துவந்த மாணவர் திரு. கார்திக்பிரபு என்பவர் அவர் தங்கியிருந்த ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது கல்விநிலையத்திற்கு வெளியே நடந்த ஒருதுயரமான சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். அவர்களுக்கு எங்களது கல்விநிலையம் முழுஒத்துழைப்பை அளித்து வருகிறது. 

பின்னர் மாணவர் திரு பிரபுவின் தந்தை திரு. கண்ணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தனது மகன் படிப்பிற்கு வாங்கி கடனை அடைத்துவிட மனிதாபிமான ரீதியில் சுமார் ரூ.65ஆயிரம் அவரிடம் காசோலையாக கல்வி நிலையத்தின் சார்பில் வழங்கப்பட்டது. கல்விக்கட்டணம் திருப்பி வழங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர் பிரபுவின் இறுதி நிகழ்ச்சிக்கான செலவுத்தொகையும் வழங்கப்பட்டது.

இதுபோன்ற ஆக்கப்பபூர்வமான பணிகளை சென்னைஸ் அமிர்தா செய்துள்ளபோதிலும் மாணவர் பிரபுவின் தந்தை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பு என்ற தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் திரு. ராமகிருஷ்ணன் என்ற நபர் ஆகிய இருவர் இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளை வெளிச்சம் டிவி ஒளிப்பரப்பியுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பு பொதுமக்களிடம் எங்களது கல்வி நிலையம் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. மாணவர் இறந்த சம்பவம் எங்களது கல்வி நிலைய வளாகத்திற்குள்நடந்தது போன்ற அதில் திரித்துக்கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ 2015 மே மாதம் www.velichamtv.com என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக், யூ டியூப், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் புகழ்பெற்ற எங்களது கல்விநிலையத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த வீடியோ காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த வீடியோ பார்க்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவறாக புரிந்துகொள்வதோடு அதை சமூக வளைத்தளங்களிலும் மொபைல் போன்களில் வாட்ஸ் அப் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது எங்களது கல்விநிலையத்தின் புகழக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

எங்களது கல்விநிலையத்தின் பெயர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இலட்சிணை, புகைப்படம், ஆடியோ உரையாடலகள் ஆகியவற்றை கொண்டு அந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் நடந்து கொள்ளும்முறையை பார்க்கும்போது தனியார் விடுதியில் நடைபெற்ற சம்பவத்தை எங்களது கல்வி நிலையத்தோடு தொடர்புபடுத்தி அல்லது அந்த சம்பவத்திற்கு நாங்கள் தான்பொறுப்பு என்ற வகையில் பொதுமக்களிடம எங்களது கல்வி நிலையம் குறித்து தவறான தோற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார்கள். அந்த சம்பவம் தற்போதும் உரிய அமைப்புகளின் விசாரணையில் உள்ளது. வீடியோவில் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றும் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் எங்களது கல்வி நிலையத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதனை அடையாளம் தெரியாத ஏராளமான நபர்கள் மற்றவர்களோடு பேஸ்புக் மூலமாக “ ஸ்ட்ரோல் சென்னைஸ் அமிர்தா’’ என்ற தலைப்பிட்டு பகிர்ந்து கொள்கிறார்கள். இதுபோன்ற மோசமான வீடியோக்கள் எங்களது கல்வி நிலையத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும்.

2015 ஜூலை 24 ஆம் தேதி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கல்விநிலையத்திற்கு ஆதரவாகவும் வெளிச்சம் டிவி மற்றும் அதன் உரிமையாளர்கள் மற்றும் மறைந்த மாணவர் திரு பிரபுவின் தந்தை திரு.கண்ணன், திரு.ராமகிருஷ்ணன் மற்றும் இந்த தகவலை பரப்பிவரும் 3வது தரப்பினர் ஆகியோருக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதிகள் எண் 3 மற்றும் பிரதிவாதிகள் 4 ஆகியோர் அளித்துள்ள பேட்டிகளின் ஒலி ஒளி காட்சிகள் மற்றும் எங்களது கல்வி நிலையத்தின் பெயர் மற்றும் அதிகாரபூர்வ இலட்சிணை ஆகியவற்றுடன் கூடிய வீடியோவை பொதுமக்களுக்கு கிடைக்கச்செய்வது,ஒளிப்பரப்புவது, அல்லது பிரச்சனை செய்வது அல்லது பிரதிஎடுப்பது, பகிர்ந்து கொள்வது, அல்லது பிரதியை காட்டுவது, அல்லது வெளியிடுவது, அல்லது பதிவேற்றம் செய்வது, அல்லது பதிவிறக்கம் செய்வது, காட்சிப்படுத்துவது கூடாது. மேலும் டிரேட் மார்க் பதிவு பெற்ற எங்களது கல்விநிலையத்தின் சென்னைஸ் அமிர்தா என்ற பெயர் மற்றம் அதன் அதிகாரப்பூர்வ தூதுவர் ஆகியோரையும் சிடி, டிவிடி, புளே ரே டிஸ்க், விசிடி, கேபிள்டிவி, டிடிஎச், இன்டர்நெட் சேவைகள், எம்எம்எஸ், டபாஸ், கண்டிஷ்னல் ஆக்சஸ் சிஸ்டம், அல்லது சமூக வளைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மொபைல் போன்கள் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாகவும் பரப்பக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்களை களங்கப்படுத்தும் அந்த வீடியோ காட்சிகளை நீக்காவிட்டால் அல்லது தொடர்ந்து சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுவது அல்லது மொபைல் போன்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளுவது ஆகியவை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரi வ மீறுவதோடு தண்டனைக்கு உட்படுத்தக்கூடியதாகும்.

கடந்த மாதம் எங்களது கல்வி நிலையம் வெற்றிகரமாக வழக்கு தொடுத்து எங்களது பழையகூட்டாளிகளான திருமதி மணிமேகலை, திரு.சுரேஷ், திரு சதிஷ்குமர் மற்றும் திரு அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்,கோயம்பத்தூர் ஆகியோர் எங்களது சென்னைஸ் அமிர்தா கல்வி நிலையத்தின் பெயரை பயன்படுத்த தடை உத்தரவு வாங்கியுள்ளோம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...