Monday 20 July 2015

இன்று வெளிவருகிறது சகலகலா வல்லவன் படத்தின் இசை

நடிகர்  ஜெயம் ரவி ரோமியோ ஜூலியட் வெற்றி படத்தை தொடர்ந்து இவர் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் சகலகலா வல்லவன் (அப்பா டக்கரு ) இந்த படத்தின் தலைப்பு சில நாட்களுக்கு முன்புதான் மாற்றப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இதற்கு முன் இருந்த அப்பா டக்கரு என்ற தலைப்பை எடுத்து புதிய தலைப்பாக சகலகலா வல்லவன் என்று இப்படத்திற்கு வைத்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அஞ்சலி நடிக்கின்றனர். மேலும் சூரி, பிரபு, விவேக், ராதா ரவி,நான் கடவுள் ராஜேந்திரன், கும்ம்கி அஸ்வின் மற்றும் பலர் நடித்திருகின்றனர்.

சூரஜ் இயக்கும் இப்படத்திற்கு லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது, இசையமைப்பாளர் S. தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை இன்று மாலை 7 மணியளவில்  ரேடியோ மிர்ச்சியில் வெளியிடுகின்றனர் படக்குழுவினர்கள்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...