Friday 24 July 2015

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் நடிகை சிருஷ்டிடாங்கே

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டிடாங்கே. அதனை தொடர்ந்து வெளிவந்து வெற்றிபெற்ற மேகா திரைப்படம் ரசிகர்களின் பார்வையை இவர் பக்கம்திருப்பி, யார் இந்த கண்ணக்குழி அழகி என்று அனைவரையும் பேசவைத்தது. அதுமட்டுமல்லாமல் மேகாதிரைப்படத்தில் இவரது நடிப்பு தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி அங்கீகாரத்தையும் பெற்று தந்தது.அதன்பின்னர் டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என வரிசையாக இவரது படங்கள்வெளிவந்தன. தற்போது சிருஷ்டி டாங்கே இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகிகொண்டிருக்கும் வில்அம்பு, நடிகர் நரேனுடன் கத்துக்குட்டி, ம.க.பா ஆனந்துடன் நவரச திலகம், விஜய் வசந்துடன் அச்சமின்றி மற்றும் பிரசன்னா - கலையரசன் சேர்ந்து நடிக்கும் இதுவரை பெயர் சூட்டப்படாத ஒரு திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

ஆனாலும் இதுவரை தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்காத சிருஷ்டி டாங்கே தற்போது அவரதுநன்றியை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பியே இந்த அறிக்கையை வெளியிடுகிறார்.

வணக்கம், நான் சிருஷ்டி டாங்கே. தமிழ் சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உயரசெய்த பத்திரிக்கை மற்றும்ஊடக நண்பர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை உங்களை தனிப்பட்டமுறையில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனால் விரைவில் உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கான அழைப்பு உங்களை தேடிவரும் .இனி என்னை பற்றிய தகவல்களையும் எனது திரைப்படங்கள் பற்றிய செய்திகளையும் ஊடக நண்பர்களுக்கு தெரிவிக்க திரு யுவராஜ் அவர்களை எனது மக்கள் தொடர்பாளராக நியமித்துள்ளேன் என்பதையும் இந்த செய்தியறிக்கை மூலம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...