Thursday 30 July 2015

விஜய் சாருக்கு நன்றி சொல்லணும் - சிம்புதேவன் விறுவிறுப்பான பேச்சு

வணக்கம், கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது எல்லோரும் எங்களை மன்னிக்க வேண்டும், ஓவ்வொரு முறையும் நான் சொல்றதுதான் இந்த புலி படம் நிஜமாகவே ரொம்ப ஸ்பெஷம் படம் எனக்கு. எனக்கும் சரி, செல்வகுமார் சாருக்கும் நீங்கள் தொடர்ந்து நல்ல ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அதற்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன்.


அடுத்து நான் என்னுடைய மிகப்பெரிய நன்றியை விஜய் சாருக்குதான் சொல்லனும், ஏனென்றால் ஆரம்பத்தில் இந்த கதையை நான் அவரிடம் கூறும்போது படத்தின் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.


என்னுடைய தயாரிப்பாளர்கள் யார் என்று விஜய் சார் அறிமுகப்படுத்தும்போது இருந்த சுறுசுறுப்பு இன்றும் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இருவரிடமும் இருக்கிறது. இவர்கள் என்னுடைய டைரக்‌ஷன் டீமில் பணிபுரிபவர்கள் மாதிரி அத்தனை உதவிகளை செய்து கொடுத்தார்கள் அவர்களுக்கு என் நன்றி..

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...