Wednesday 22 July 2015

விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபலங்கள்

நடிகர் விஜய் புலி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் தற்போது இப்படத்தை பற்றி சில செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் படபிடிப்பு முதல் கட்டம் முடிந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு வில்லனை தேடுகின்றனர். முதலில் இப்படத்திற்கு வில்லனாக  இயக்குனர் பாரதிராஜாவை அணுகியுள்ளனர் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

நான் சில படங்களில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறேன் ஆனால் விஜய்க்கு வில்லனாக நடிப்பது வாய்ப்பே இல்லை என்று கூறினார், இவரை தொடர்ந்து நடிகர் சத்தியராஜை அணுகினார்கள் இவர் நண்பன் படத்தில் விஜயுடன் நடித்திருப்பதால் இவரிடம் விஜய்க்கு வில்லனாக நடிக்க கேட்டிருந்தார்.

ஆனால் அவரும் நடிக்க மறுத்துவிட்டார். நான் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கேட்டபோதே மறுத்துவிட்டே விஜய்க்கு வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறினார் சத்யராஜ்.

இருவரும் நடிக்க மறுத்தால் இயக்குநர் மகேந்திரனை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மேலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன்  நடிக்கிறார், முக்கியவேடத்தில் ராதிகா இயக்குனர் மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை பற்றி செய்திகள் வெளிவரும் என்று எதிபார்க்கப்படுக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...