Saturday 25 July 2015

இசையமைத்து கொண்டிருக்கும்போது மயங்கிவிழுந்த யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் இசையில்  தனக்கென ஒரு இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா, இவர் தற்போது வெளிவர தயாராக இருக்கும் படம் இடம் பொருல் ஏவல் இந்த படத்தில் இசையமைத்திருகிறார் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களியிடையே  பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ‘தரமணி’, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் ’யட்சன்’ ஆகிய படங்களில் இசையமைக்கிறார்.

மேலும் செல்வராகவன் இயக்கும்  சிலம்பரசன் நடிக்கும் ‘கான்’ படத்தில் இவர்தான் இசையமைக்கிறார் மீண்டும் இவருடன்  கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் யுவனின் உடல்நலம் குறித்த ஒரு கவலைகொள்ளத்தக்க செய்தி வந்துள்ளது. கனடாவில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சிக்காக இராப் பகலாக ஒத்திகை பார்த்துவரும் யுவன் நேற்று மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

யுவனைப் பரிசோதித்த மருத்துவர் பல நாட்கள் சரியான உணவு, உறக்கக்கமின்றி பணியாற்றியதாலும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொண்டதாலும் அவர் உடல் மிகவும் சோர்வடைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர் அதோடு யுவன் சில நாட்களுக்காவது முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்,.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...