Friday 24 July 2015

50 ஆவது நாளை தாண்டியுள்ளது காக்கா முட்டை

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர்  வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வெளிவந்து தேசிய விருது பெற்ற காக்கா முட்டை இன்றுடன் 50 ஆவது நாளை தாண்டியுள்ளது. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரமேஷ், விக்னேஷ் என  இரு சிறுவரும் நடித்திருக்கும் இப்படத்தில் இவர்களுக்கு அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க ஒரு குப்பத்தில் எடுத்திருக்கும் இப்படம் மக்களில் மனதில் இடம் பிடித்துவிட்டது. இதில் நடித்திருக்கு இரு சிறுவர்களும் தனது நடிப்பினால் ரசிகர்களிடேயே தனது முகத்தை பதித்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...