Sunday 19 April 2015

வாழ்க்கையில் . பெண்கள் காதலில் மட்டும் சறுக்கிவிடுகிறார்கள். அறிவை இழக்கிறார்கள் : பெண் இயக்குநர் பரபர பேச்சு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரப் படம் திரையிடல் நிகழ்ச்சி இன்று மாலை சென்னை போர் ப்ரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது.


மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பான 'சென்னை டர்ன்ஸ் பிங்க்' நிறுவனர் ஆனந்த குமார் , அனைவரையும் வரவேற்றார்.அவர் பேசும்போது ''வெஸ்ட் கேன்ஸர் ரிசர்ச் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமாக சென்னை டர்ன்ஸ் பிங்க் செயல்படுகிறது. இது அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுனர்களைக் கொண்டு மார்பகப் புற்றுநோய்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது மார்பக சுய பரிசோதனை செய்வது எப்படி? என்பதனை சென்னையிலுள்ள மகளிர் கல்லூரி களிலும் கிராமப்புற பகுதிகளிலும் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

சென்னையிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிராம புறங்களிலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவேன்டும் என்றநோக்கத்தில் 108 பிங்க்அம்பாசிடர்களையும் 17 ஆயிரம் பிங்க் வாரியர்ஸ் களையும் நிறுவி செயல்படுகிறது. '' என்றார்.

.'சென்னை டர்ன்ஸ் பிங்க்' பற்றி செயலாளர் ரௌனக். ஜி விளக்கினார்
நடிகை ஷ்ரேயாரெட்டி விளம்பரப் படத்தை அறிமுகம் செய்தார்.

விளம்பரப் படம் பற்றி இயக்குநர் விஜயபத்மா பேசும்போது.

" எனக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வமும் விருப்பமும் உண்டு.நான் தமிழ்நாடு மருத்துவமனையில் வேலை பார்த்த போது புற்றுநோய் போன்ற பல விழிப்புணர்வு மருத்துவமுகாம்கள் 250க்கு மேல் கலந்து கொண்டுள்ளேன். . நான் இயக்கிய 'நர்த்தகி' திரைப்படத்தில் கூட சமூகநோக்கில் கதை சொல்லியிருப்பேன். விளம்பரப் படத்தை அறிமுகம் செய்ய இதில் கலந்து கொள்ள கேட்டதும் ஷ்ரேயா ரெட்டி உடனே ஒப்புக் கொண்டதற்கு நன்றி .

நான் முதலில் எடுத்த குறும்பட முயற்சிக்கு ஷ்ரேயா வின் மாமியார்தான் தயாரிப்பாளர். இதை குறுகிய கால அளவில் எடுத்தோம்.நோய் பற்றி பயமுறுத்தாமல் ஜாலியாக நம்பிக்கையூட்டும்படி எடுத்திருக்கிறோம். பெண்கள் எவ்வளவோ பொருளாதார சுதந்திரம் பெற்று ள்ளார்கள்.இருந்தும் வாழ்க்கையில் ஒரு இடத்தில் மட்டும் சறுக்கிவிடுகிறோம். .வாழ்க்கையில் . பெண்கள் காதல் என்கிற விஷயத்தில் மட்டும் சறுக்கிவிடுகிறார்கள். அறிவை இழக்கிறார்கள் . அதில்தான் சுயத்தை இழக்கிறோம் அதில் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருந்தால் சாதிக்கலாம்.'' என்றார்.

பிங்க் தூதர் நீரஜா மாலிக் பேசும்போது

''நான் இதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி .சென்னை டர்ன்ஸ் பிங்க்' இந்த விழிப்புணர்வு நிலை எடுத்ததில் மகிழ்ச்சி. வாழ்க்கையில் எந்த நோய் பற்றியும் கவலை கூடாது. சோகம் கூடாது நோயா ஐயோ பயங்கரம் என்று பீதியடைக் கூடாது. எனக்கும் அப்படி ஒரு சூழலில் இந்த நோய் இருந்தது. மீண்டு வந்து விட்டேன். முன்பு மாதிரி இல்லை இப்போது எவ்வளவோ நவீன மருத்துவங்கள் வந்து விட்டன. சவாலை சந்தித்து மோதி ஜெயிக்க வேண்டும். ''என்றார்.

சௌம்யா அன்புமணி பேசும்போது

" சென்னை டர்ன்ஸ் பிங்க்'அமைப்பின் மூலம் இவர்கள் இப்படி மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மராத்தான், வாக்கத்தான் போல நிறைய செய்து வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்து பல பெண்கள் நண்பர்கள், படித்தவர்கள், போலீஸ் துறையினர், படித்தவர்கள் டாக்டரேட் முடித்தவர்கள் கூட இந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

பெண்கள்35 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். படித்த பெண்களிடம் கூட இந்த விழிப்புணர்வு இல்லை .எவ்வளவோ விஷயங்கள் பற்றி அக்கறை எடுக்கும் பெண்களிடம் தங்கள் உடல்நலம் பற்றிய அக்கறை இல்லை. நான், தாயார், மாமியார், நாத்தனார் என எல்லாரும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் முடிந்ததும் மார்பகப்புற்றுநோய் சோதனை செய்து கொள்வோம். என் அத்தை ஒருவர் படிக்காதவர் கிராமத்திலிருக்கிறார். இந்த புற்று நோய் வந்து 25 ஆண்டுகளுக்குமுன்பே சர்ஜரி செய்து இன்றும் நலமாக இருக்கிறார். பெண்களிடம் இந்த விழிப்புணர்வை அதிகப் படுத்த வேண்டும்." என்றார்.

நடிகை ஷ்ரேயா ரெட்டி பேசும்போது

"இதில் நான்கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அது என் கடமை. இது ஒரு உணர்ச்சிகரமான -சென்சிடிவான பிரச்சினை.

சரியான விழிப்புணர்வு இல்லையே ,சில பெண்கள் பற்றிய நிலைமைகள் அதிர்ச்சி தரும்படி உள்ளன. . இந்த நோய் சவாலை சந்திக்க அஞ்சக் கூடாது. திருமணம் ஆனவர், ஆகாதவர் என்றில்லை எல்லாரும் இந்த மார்பகப்புற்றுநோய் சோதனை செய்யவேண்டும். அதில் தப்பில்லை. தயங்கக் கூடாது.'' என்றார்
.
நிகழ்ச்சியில் சென்னை டர்ன்ஸ் பிங்க்' அமைப்பின் விளம்பரத்தூதர்கள் திருமதி சௌம்யா அன்புமணி, நீரஜா மாலிக், மட்டுமல்ல லட்சுமி ராகவேந்தர், ஹாரதி கணேஷ், ஸ்ரீமதி கேசன், அஸ்மிதா பார்த்தி, பாரதி ஸ்ரீதர், தீபா ஆத்ரேயா, டாக்டர் மினிராவ், மிருதுளா, சுலபா, நேஹா ஜம்பா, மயூரி சேகர், சாரா நடாசா, வர்ஷா அஸ்வின், ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...