Sunday 8 March 2015

எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம்

கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசியா என்ற படத்தை தமிழில் சித்தார்த், தீபா சன்னதி நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் பிரசாத் ராமர் இயக்கத்தில் திருக்குமரன் நிறுவனம் தயாரித்து இருக்கும் படம் தான் எனக்குள் ஒருவன்.

திரையரங்கு ஒன்றில் வேலை பார்க்கும் ஏழை குடும்பத்து இளைஞனான சித்தார்த்துக்கு தினமும் தூக்கம் வராததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார். தன் தூக்கத்தை மற்றும் பெரிய ஆளாக வேண்டும் என்று ஏக்கத்தை தேடி அழையும் இவருக்கு கிடைப்பது தான் லூசியா என்ற மாத்திரை. இதை சாப்பிட்ட பிறகு ஹாலிவுட் படமான இன்ஸ்பெஷன் ஸ்டைலில் கனவு உலகத்திற்கு செல்ல, அங்கு அனைவரும் விரும்பும் பெரிய நாயகனாக வலம் வருகிறார் சித்தார்த்.

இந்த நிஜம் மற்றும் நிழலில் நடக்கும் சம்பவங்கள் தான் இதில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதியில் அவர் அதிலிருந்து வெளிவந்தாரா? என்ன ஆனது? என்பதை மிகவும் சஸ்பென்ஸுடன் கூறியுள்ளனர்.


இரண்டு கதாபாத்திலும் வித்தியாசமான பாடி லேங்குவேஜ், நடிப்பு, தோற்றம் என தன்னை வித்தியாசபடுத்தி நடிப்பில் அசத்துகிறார் சித்தார்த். அறிமுக நாயகி தீபா சன்னதி அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சூப்பர், பின்னனி இசை படத்திற்கு வலுசேர்கிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் நம்மை வியக்கவைக்கிறார்.

ரீமேக் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பிரசாத் ராமருக்கு பாராட்டுகள், என்ன இந்த கதை எளிய மக்களுக்கு புரியுமா என்றால் அந்த இடத்தில் பெரிய கேள்விக்குறி வந்து நிற்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களை தயாரித்து வரும் திருக்குமரன் நிறுவனத்திற்கும் அவருடன் இணைதிருக்கும் நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...