Saturday 7 February 2015

சாதனை படைத்த சகாப்தம்

கடந்த ஜனவரி மாதம் 31ந் தேதி சென்னை வடபழநி கீரீன்பார்க் மைதானத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சன்முகப்பாண்டியண் நடித்து வெளிவரவிருக்கும் 'சகாப்தம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சத்யராஜ், பிரபு, வாகை சந்திரசேகர், S.A. சந்திரசேகர், P. வாசு,
K.S. ரவிகுமார், சுந்தர்.சி, மற்றும் இளம் நடிகர்கள் ஜெயம் ராஜா, சிபிராஜ், விமல், விக்ரம் பிரபு, உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் மினி ஹெலிகாப்டர் மூலம் குறுந்தகடு வெளியிடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. இவ்விழாவில் இசையுடன் படத்தின் முன்னோட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் YouTube ல் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்து ஹிட்டுக்களை குவித்து வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியண் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...