Wednesday 28 January 2015

உறுதியானது "உத்தம வில்லன்" படத்தின் வெளியிட்டு தேதி

உலக நாயகன் கமல்ஹாஸனின் நடிப்பில் உருவாகி வெளிவர தாமதமாக உள்ள படம் உத்தம வில்லன் இப்படம் வரும் ஏப்ரல் மாதத்துக்கு வெளிவருவதாக தகவல்கள் வந்துள்ளது.

ஒரு வருடங்களுக்கு முன்பு கமல் ஹாஸன் நடிக்க ஆரம்பித்த படம் உத்தம வில்லன். படத்தை சென்ற செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் வெளிவர தாமதமாகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

வரும் ஏப்ரல் மாதம்  13-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தை வாங்கியுள்ள ஈராஸ் நிறுவனத்தின் கைவசம் வேறு பெரிய படங்கள் உள்ளதாலும் இந்த முடிவாம். ஏப்ரல் 14-ம் தேதி சித்திரைப் புத்தாண்டு என்பதால் அதையொட்டி படத்தை வெளியிடும் எண்ணமாகவும் இருக்கலாம் என்றனர் பட குழுவினர்கள்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...