Saturday 9 August 2014

திருடனாகும் கதாநாயகன்


பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து கொள்ளும் நற்பண்புகளை கொண்டவன்.

காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடனானான்? எதற்காக திருடுகிறான் என்பதே “இரவும் பகலும் வரும்” படத்தின் கதை.

படத்தின் கதாநாயகனாக அங்காடி தெரு மகேஷ், கதாநாயகியாக அனன்யா நடித்துள்ளனர். வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் பாலஸ்ரீராம் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.

தனது குரு தன் முதல் படத்தில் நடிக்க பெரிது ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும், படத்தின் கதாநாயகி அன்ன்யாவிடம் கதையை சொல்லி முடித்த கனத்திலேயே 1 ரூபாயை முன் தொகையாய் பெற்று கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார் என பூரிப்புடன் கூறினார் இயக்குனர் பாலஸ்ரீராம்.

படத்திற்கு இசை தீனா, ஒளிப்பதிவு கிருஷ்ணசாமி. படத்தொகுப்பு – வி.டி.விஜயன்

சுமார் 50 நாட்கள் படபிடிப்பு நடைபெற்ற இப்படம் நாமக்கல், தொட்டியத்தில் உள்ள ஒரு பொறீயியல் கல்லூரியிலும், சென்னையின் முக்கிய இடங்களிலும் படமாக்கபட்டுள்ளது.

இப்படத்தை ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பாக பாலசுப்புரமணியம் பெரியசாமி தயாரித்துள்ளார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...