Tuesday 26 August 2014

ஹீரோவின் ஆட்டத்தை கண்டு வியந்த மும்பை நடிகை

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்” ஜெய்நாத் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். மற்றும் கே.பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான்அண்ணாச்சி, ராதா, சிங்கம் புலி, ரவிமரியா, மகேந்திரன், சார்மிளா, கூல்சுரேஷ், நான்கடவுள்ராஜேந்திரன் பாரதிகண்ணன், நெல்லைசிவா, பாவாலட்சுமணன், முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் பார்த்தாலே – பலம் கூடும்டி “ என்ற பாடல் காட்சிக்காக மும்பையிலிருந்து வைபவி என்ற நடிகையை ஒப்பந்தம் செய்திருந்தனர். தனக்கு ஈடுகொடுத்து ஆடக் கூடிய நடிகருடன் தான் நடிப்பேன் என்று சொன்னார் வைபவி. படப்பிடிப்புக்கு வந்த அவர் ஜெய்நாத்துடன் ஆடி முடித்த பிறகு நானே எதிர்பார்க்க வில்லை சூப்பராக ஆடி இருக்கே என்று பாராட்டினார்.

அத்துடன் இந்த பாடல்காட்சி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா தலைமையில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்தேவாவும் இந்த குத்துப்பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார் என்று கூறினார் இயக்குனர் ராதாபாரதி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...