Tuesday 26 August 2014

அஞ்சலியிடம் பணம் பறிக்க நாடகம்


இயக்குனர் களஞ்சியம் சில நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நேரத்தில், இயக்குனர் களஞ்சியம் சீரியசான நிலையில் கோமாவில் இருப்பதாகவும் அவருக்கு நடிகை அஞ்சலி தான் நடிப்பதற்காக வாங்கிய பணத்தை திரும்ப தந்து உதவ வேண்டும் என்றும் ஒரு கடிதத்தை நேற்றைய தினம் களஞ்சியத்தின் நண்பர் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியிருந்தார்.

இந்த செய்தியை பல இணைய தளங்களிலும், தமிழ் நாளிதழ்களிலும் இன்றைய தினம் வெளியிடப்பட்டது.

ஆனால் இயக்குனர் களஞ்சியம் அவர்கள் கோமாவில் இல்லை, மற்றும் சிறு சிறு காயங்கள் மட்டுமே அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. எனவே அந்த கடிதம் அஞ்சலியிடம் பணம் பறிக்க நடைபெற்ற மோசடி நாடகம் என்பது தெட்டத்தெளிவாக தெரியவந்துள்ளது.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...