Wednesday 13 August 2014

வேலை வாய்பை தரும் சென்னை அமிர்தா

இரண்டாமாண்டில் மாணவர்கள் சிங்கப்பூரில் பயில வாய்ப்பு 

சென்னை ,12 ஆகஸ்ட் 2014 ; சென்னை அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உலகப்புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் அண்ட் பைனான்ஸ் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சென்னை அமிர்தாவில் பயிலும் மாணவர்கள் இரண்டாமாண்டு படிப்பை சிங்கப்பூரில் மேற்கொள்ளலாம். மாணவர்கள் அங்கேயே மேற்படிப்பை தொடரும் வாய்ப்பையும் பெறலாம்.

சென்னை அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இத்துறையில் முன்னோடி கல்வி நிறுவனமாக விளங்குகிறது. பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது. சென்னை அமிர்தாவில் பயிலும் மாணவர்களுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதுடன், பயிற்சியின் போதே ஊக்கத்தொகை மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. சென்னை அமிர்தாவில் வழங்கப்படும் பயிற்சி நடைமுறை சார்ந்ததாக இருக்கிறது. மாணவர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகளில் பயிற்சி பெறலாம். தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை அமிர்தாவில் உலகத்தரத்திற்கு நிகரான பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் சென்னை அமிர்தா சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி வாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்த வரிசையில் சென்னை அமிர்தா இப்போது லண்டன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் அண்ட் பைனான்ஸ் (எல்.எஸ்.பி.எப்) கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 150 நாடுகளைச்சேர்ந்த 38,000 மாணவர்கள் பயில்கின்றன. யு.கே, சிங்கப்பூர் மற்றும் கனடாவில் இதன் வளாகங்கள் அமைந்துள்ளன.

சிங்கப்பூர், எல்.எஸ்.பி.எப் கல்வி நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் டிப்ளமோ இன் இண்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட் பயிலும் மாணவர்கள் இரண்டாமாண்டு படிப்பை சிங்கப்பூரில் மேற்கொள்ளலாம். அங்கு பயிற்சியின் போதே 1,000 சிங்கப்பூர் டாலர் வரை உதவித்தொகையாக சம்பாதிக்கும் வாய்ப்பையும் பெறலாம். மாணவர்கள் சிங்கப்பூரிலேயே அட்வான்ஸ்டு டிப்ளமோ படிக்கும் வாய்ப்பையும் பெறலாம். சிறந்து விளங்கும் மாணவர்கள் அங்கேயே பணி புரியும் வாய்ப்பையும் பெறலாம்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் சென்னை அமிர்தா சி.இ.ஒ ஆர்.பூமிநாதன் இந்த கூட்டுறவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார். லண்டன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் அண்ட் பைனான்ஸ், இயக்குனர் மைக்கேல் கோப், தென் கிழக்கு ஆசிய நிர்வாக இயக்குனர் ஆர்.ராதாகிருஷ்ணன், மலேசியாவின் தர்சுல் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கலையரசன்,டிரைனிங் மைண்ட்ஸ் எச்.ஆர், ஜெய்னானக் சிங் மற்றும் தர்சுல் பயிற்சி மையத்தின் ஜேம்ஸ் டேன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் & ஃபினானாஸ் உலகின் தலைசிறந்த தொழில் மேலாண்மை கல்வி நிலையங்களில் ஒன்றாக வளர்ந்து வருவது தான் லணடன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் & ஃபினான்ஸ். கடந்த 10 ஆண்டுகளில் யுகே , சிங்கப்பூர் கனடா மற்றும் பல முக்கிய 12 நகரங்களில் மண்டல அலுவலகங்கள் கொண்டு இயங்கி வருகிறது இக்கல்வி நிலையம். பல தொழில் நிறுவனங்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்நிறுவனம் சமிபத்தில் சர்வதேச வர்த்தகத்தில் தங்களின் பங்களிப்பிற்காக ’குயின்ஸ் அவார்ட் ஃபார் எண்டர்பிரைசஸ்’ என்ற விருதை பெற்றுள்ளது. இக்கல்வி நிலையம் வழங்கும் தரமான கல்விக்கு சான்றாக சமிபத்தில் ’4 இயர் எஜீ ட்ரஸ்ட் ஸ்டேட்டஸ்’ என்ற கெளரவத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...