Saturday 2 August 2014

'மிஸ்டிக் கொலிஷன்ஸ்' புதுமை பரப்பும் இசைக் குழு


புதிய முயற்சி!புதிய பாதை! புதிய    பயணம்!
'மிஸ்டிக் கொலிஷன்ஸ்' புதுமை பரப்பும் இசைக் குழு!


புதுவித இசைப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது 'மிஸ்டிக் கொலிஷன்ஸ்' .

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2011 டைட்டில் வின்னர் சாய்சரண் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் முன்னணி முகங்களான கௌஷிக், நாராயணன் ஆகிய இந்த மூவரும் இணைந்துஉருவாக்கியுள்ள இசைக் குழுதான் மிஸ்டிக் கொலிஷன்ஸ்.

இந்த யோசனையின் மூலவர் சாய்சரண். உறு துணையாக இருந்தவர்கள் கௌஷிக், நாராயணன் எனலாம். மிஸ்டிக் ப்ரீஸ்டைல் மியூசிக் பாண்ட்.

லோக்கலாக சென்னையில் வேரூன்றி குளோபலாக உலகெங்கும் கிளைபரப்பி இசை பரப்பவுள்ளது. இவர்களுடன் ஏர்டெல் போட்டி பாடகிகள் மதுமிதாவும் வைஷாலியும் இணைந்துள்ளனர்.

புதிய மாயஉலகத்துக்கு நம் செவிகளை அழைத்துச் சென்று தேன் பாய்ச்சிட முனைகிறது 'மிஸ்டிக் கொலிஷன்ஸ்' . நம் காதுகளைக் கௌரவப் படுத்தும் முயற்சி இது.

ஓர் இசை நிகழ்ச்சியுடன் ஆகஸ்ட் -1ல் தன் பயணத்தைத் தொடங்கியது மிஸ்டிக் கொலிஷன்ஸ் குழு.புதிய இசைக்குழு மிஸ்டிக் கொலிஷன்ஸ் பாண்ட் தொடக்கவிழா நேற்று சென்னை மயிலாப்பூர்பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் , 'இசைமழலைகள்' நிறுவனர் அபஸ்வரம் ராம்ஜி, பிரபல பாடகர் அனந்த் வைத்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்புவிருந்தினர்களிடம் இசைக்குழுவினர் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட பின் கச்சேரி தொடங்கியது
நிகழ்ச்சி வந்தவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கும் முன் குழுவினரை வலம் வந்த போது...
குழுவின் செயல்பாடுகள் என்னென்ன?முதலில் சாய் சரணிடம் கேட்டோம்

இந்தக் குழுவின் செயல்பாடுகள் பற்றிச் சாய்சரண் கூறும்போது, "இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்ப்பது. உலக இசைவளத்தை நம்மூருக்குக் கொண்டு வருவது எங்கள் ஆசை,லட்சியம்,கனவு எல்லாமும் .அதன் அடையாளமாக எங்கள் பாண்ட் தொடக்க விழாவிலேயே 2 மணி நேர இசைநிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். அதில் 15 பாடல்கள். தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பலமொழிகளிலும் இடம் பெறுகின்றன.இசைக்கு பலபரிமாணங்கள் உண்டு. இதுவும் ஒருவகை பரிமாணம். டால்பி அட்வான்ஸ் என்பதை லைவாக செய்கிறோம்,பயன்படுத்துகிறோம். பிரபலமான மெட்டு ஆனால் புது அனுபவம்.புதிய சோதனை முயற்சி பாட்டு மெட்டு மாறாது. அதில் உள்ள பிஜிஎம் எடுத்துவிட்டு எங்கள் பிஜிஎம் போட்டு சுவை கூட்டுவோம்நாம் கேட்டு ரசித்த பாடல்களை மேற்கத்திய புதுப்புது இசைப் பின்புலம் என அலங்காரப்படுத்தி தருகிறோம்.இது நிச்சயம் ரசிக்க வைக்கும். "என்கிறார்.

இவர்களது இசைக்குழுவின் நோக்கம் பற்றிப் பேசும்போது. "உலகம் முழுக்க இசைப்பயணம். சமுதாய சிந்தனை போடு ஆல்பங்கள் வெளியீடு, என்பவை நீண்ட கால இலக்கு.திரையிசைப்பாடல்களை பிற இசையால் பின்னணியில் வளப்படுத்தி தருவது இப்போதைய பாதை பயணம்,"என்கிறார் சாய்சரண்.

"நாம் கேட்ட சினிமாப் பாடல்களையே அரபிக், ராக், ஜாஸ், ப்ளுஸ் இசைகளால் அலங்கரித்து வழங்குகிறோம். பாடல் வரிகளையோ மெட்டையோ எதுவும் மாற்றாமல் பாடல்களுக்கு அழகாகநாங்கள் செய்யும் மேற்கத்திய ஒப்பனை பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். "என்கிறார். இன்னொருவர் கௌஷிக்

"மியூசிக் கம்போசர் ஆவதே எங்கள் இலக்கு. அதை நோக்கிய பாதையில் சந்திப்பவைதான் இம் முயற்சிகள். எங்களுக்கு இசைதவிர வேறு எதுவும் தெரியாது."என்கிறார் மற்றொருவரானநாராயணன்.
இவர்களது இசை முயற்சியை பாராட்டி ஊக்க மூட்டிய இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை தங்களால் மறக்க முடியாது என்று மூவரும் ஒரே ஸ்ருதியில் கூறுகிறார்கள்.

"சினிமாப் பாடலை அப்படியே பாட எத்தனையோ ஆர்க்கெஸ்ட்ராக்கள்இருக்கின்றன. அவற்றிலிருந்து மாறுபட்டு நாங்கள் செய்ய நினைத்தோம். அதுதான்மிஸ்டிக் கொலிஷன்ஸ் என்கிற இந்தஇசைக்குழு. இதில் நான் நாலு பாடல்கள் பாடுகிறேன். இந்த ஐடியா பிடித்துதான் நான் இதில் இணைந்தேன்." என்கிறார் பாடகியான மதுமிதா,

''இது அவர்களின் நீண்டநாள் கனவுத் திட்டம். மதுமிதா, நாராயணன் எங்களுடன் பாடியவர்கள் சாய்சரண், கௌஷிக் எங்களுக்கு முந்தைய சீசனில் பாடியவர்கள்.எதுமாதிரியும் இல்லாமல்புதுமாதிரியாக இருந்ததால் நானும் இணைந்தேன் என்கிறார் இன்னொரு பாடகியான வைஷாலி.

புதுவித ஒலியமைப்பின் மூலம் தன் பாடல்களை உயரம் தொடவைத்தவர் ஏ.ஆர். ரகுமான். அவரைப் போல இசை நிகழ்ச்சியிலும் ஒலி அமைப்பின் பரவச பரிமாணத்தை பார்வையாளர்களுக்குவழங்க இருக்கிறார்கள் மிஸ்டிக் கொலிஷன்ஸ் குழுவினர்.

தொடக்க நாள் நிகழ்ச்சியில் எம். எஸ்.வியின் 'அனுபவம் புதுமை' முதல் இளையராஜாவின் 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு' ஏ.ஆர்.ரகுமானின் 'காதல் ரோஜாவே' வரை தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்லமலையாளம், தெலுங்கு, இந்தி பாடல்களும் ஒலிக்க இருக்கின்றன.

அட்வான்ஸ் டால்பி தொழில் நுட்பத்தில் ஒலிக்கும் இந்நிகழ்ச்சி கேட்கிற காதுகளை சிலிர்க்க வைக்கும். புதுப்புது மகிழ்ச்சியை துளிர்க்க வைக்கும்.
ஒலிவடிவமைப்பு சவுண்ட் இன்ஜினியர் வருண் வெங்கட்ராமண் , ப்யானோ ஷத்ரியன், ட்ரம்ஸ் அச்சுதகுமார், ஷரத், ரிதம் பேட்ஸ் லிவிங்ஸ்டன், மேண்டலின் சச்சிதானந்த், மேத்யூ, கிடார்நிரேக்கௌதம் போன்ற திறமைக் கரங்கள் இணைந்து இக்குழுவை வளப்படுத்துகின்றன.

இதோ புதிய இசைப்பயணம் தொடங்கிவிட்டது.இந்த மிஸ்டிக் கொலிஷன்ஸின் இசை இனிய பிரவாகமாக பொங்கி காதுகளிள் வழியே இதயங்களை நிறைக்கப் போகிறது .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...