Thursday 21 August 2014

ஆர்யாவின் தயாரிப்பில் வெளிவரும் 'அமர காவியம்'

ஒருவருடைய முதல் காதலை நோக்கி நினைவுகள் பறக்க செய்யும் அருமையான கதையை பதிவு செய்யும் படம் தான் ' அமர காவியம்'.செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளிவர இருக்கும் 'அமர காவியம்' படத்தை தயாரித்திருப்பது ஆர்யா.
 'அமர காவியம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இசையை வெளியிட்ட நயன்தாரா , த்ரிஷா ஆகியோரின் வருகையால் மாபெரும் விழாவாக நடைபெற்றது.
 படத்தின் இசையோ மதன் கார்க்கியின் பாடல் வரிகளாலும்,இசை அமைப்பாளர் ஜிப்ரானின் மெய் மறக்க செய்யும் இசையாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.'நான்' திரைபடத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்கத்தில் , ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் மியா ஜார்ஜ். 
இந்த படம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்த ஒரு தவிர்க்க முடியாத சம்பவத்தை நினைவு கூறும்' என்றார் இயக்குனர் ஜீவா ஷங்கர்


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...