Tuesday 29 July 2014

தமிழர்கள் வேட்டி கட்டிக் கொள்ள வேண்டும்! - மலேசியத் தயாரிப்பாளர் பேச்சு


தமிழர்கள் வேட்டி கட்டிக் கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தை நாம்தான் காப்பாற்றவேண்டும். யாரோ கப்பலில் வந்து நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற மாட்டார்கள் என்று மலேசிய தயாரிப்பாளர் ஒரு படவிழாவில் கூறினார்.


இது பற்றிய விவரம் வருமாறு


மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ், கெய்கர் பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் '8MM' .இதை மலேசியாவில் பல படங்கள் இயக்கியுள்ள அமின் இயக்கியுள்ளார். நாயகனாக நிர்மல், புதுமுகம் திவ்யா, பிரபல மலேசிய நடிகர் சிவபாலன்,காந்திநாதன்,விஜி,ஷியாம்,மருது,தியாகா,கேசவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தியா, மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
'8MM' படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கான சந்திப்பு இன்று சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட படக் குழுவினர் அனைவரும் கறுப்பு சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் '8எம் எம்' படத்தின் தயாரிப்பாளர் ஜெயராதாகிருஷ்ணன் பேசும்போது, " சினிமா மீது எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. வேறு தொழில் வேறு வேலை என்றிருந்தோம். அப்படிப்பட்ட எனக்கு அமின் நட்புகிடைத்தது. சினிமா பற்றி அவர் பேசியபோது இது நமக்கு சரிப்பட்டு வருமா என்று நினைத்தேன். செய்தபிறகு யோசிப்பதை விட ஈடுபடும் முன்பு யோசிப்பதில் தவறில்லை. ஒரு முறைக்கு பல முறை யோசித்தேன். அமின் சொன்ன கதை பிடித்திருந்தது. இந்தக் காலக் கட்டத்துக்கு ஏற்ற கதை. அவர் பல டெலிபிலிம்ஸ் மலேசியாவில் எடுத்தவர். அமினின் திறமை மீதும் அனுபவத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. படத்தை தொடங்கினோம்.முடித்து விட்டோம்.
அமின் ஒன்றரை ஆண்டுகள் இந்தப் படத்தோடு வாழ்ந்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பல பகுதிகளில் நடந்திருக்கிறது. மலேசியாவிலும் நடந்திருக்கிறது.பொதுவாக மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு வந்தால் அங்குள்ள இரட்டை கோபுரம், ஹைவே, பார்க் என்றுதான் எடுப்பார்கள். நாங்கள் வட மலேசியா பகுதியைச் சேர்ந்தவர்கள். வடமலேசியா என்றால் வரலாற்றில் கடாரம் என்பார்கள். 10--11 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் அரசர்கள் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் தமிழர்கள் வியாபரரம் செய்த பகுதி அது. அந்தக் கடாரம் இன்று ஷண்டி எனப்படுகிறது. இது தான் எங்கள் குடும்பத்திள் பூர்வீகம்.

அந்தக் கடாரம் பகுதியில்தான் '8எம் எம்' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். வரலாற்றுப் பகுதியில் நடந்ததால் இது வரலாற்றுப் படமல்ல. விறு விறுப்பான சஸ்டென்ஸ் த்ரில்லர்.
மலேசியாவிலிருந்து வந்து படம் தயாரித்து இருக்கிறோம். இப்படத்தை வெற்றி பெறவைக்க ஆதரவு தந்து உதவுங்கள்.

இங்கே நாங்கள் படக்குழுவினர் வேட்டியுடன் வந்ததைப் பற்றிக் கேட்டார்கள். தமிழனின் பாரம்பரிய உடை வேட்டி அதை இது போன்ற விழாக்களுக்கு கட்டி வரும் போது அழகாக இருக்கிறது. தமிழர்கள் வேட்டி கட்டிக் கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தை நாம்தான் காப்பாற்றவேண்டும். யாரோ கப்பலில் வந்து நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற மாட்டார்கள் எல்லாரும் இதைத் தொடர வேண்டும். "இவ்வாறு ஜெயராதாகிருஷ்ணன் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மலேசிய நடிகர் சிவபாலன் "இந்தப்படம் ஹாலிவுட் படம் போல அசத்தலாக இருக்கும். படத்தில் நான் 70 சதவீதம் வருவேன். ஹாலிவுட் படத்தில் பாடல் இருக்காது. இதில் பாடல்கள் இருக்கும். அதுதான் வித்தியாசம். இதில் அறிமுகமாகும் நாயகன் நிர்மலுக்கு இது முதல் படம். ஆனால் அனுபவத்தில்10 வது படம் போல தெரிகிறது.'' என்றார்.

நாயகன் நிர்மமல் பேசும் போது "நான் ஒரு டாக்டர். டெண்டிஸ்ட்.புதுமுக நடிகர்களுக்கெல்லாம் கதை சொல்ல மாட்டார்கள் என்பார்கள். ஆனால் இயக்குநர் அமின் எனக்கு முழுக்கதையையும் அழகாக விவரித்தார். மலை, காடுகளில் விலங்குகள் வராத நேரத்தில் படமெடுத்தார்கள். அப்போது பயமாக இருந்தது.சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அடித்து சண்டை போட்டு காயமடைந்தோம்." என்றார்.

நாயகி திவ்யா, பேசுவதற்கு அநியாயத்துக்கு வெட்கப்பட்டு நெளிந்தார். "என் பெயர் திவ்யா, இந்தப்படம் நடித்தது ஜாலியாக இருந்தது. "என்று சுருக்க்க்கமாக முடித்துக் கொண்டார்.

இயக்குநர் அமின் பேசும்போது படக்குழுவினர் ஒவ்வொருவரையும் பற்றிக் குறிப்பிட்டார். " தயாரிப்பாளர் ஜெயராதாகிருஷ்ணன் என் சொந்த சகோதரர் மூத்த அண்ணன் போலாகி விட்டார்.படத்திற்கு ஒளிப்பதிவு தரமாக இருக்க ரெட் உள்பட பலவகை கேமராவைப் பயன்படுத்தி உள்ளோம் ஒளிப்பதிவாளர் சக்திவேல் எங்களுடைய பட்ஜெட்டிலும் பிரமாண்டமான ஒளிப்பதிவு ரிசல்ட் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் முரளி சுப்ரமணி இசையில் பாடல்களில் பல ரக இசையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இன்னொரு இசையமைப்பாளர் எல்.வி.கணேசனின் பின்னணி இசையில் புதுவிதமான பாணிகள் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஜோவியலாகப் பழகினார்; பணியாற்றினார். நாயகி திவ்யாவுக்கு இது முதல்படம் என்றே சொல்ல முடியாது.

நாயகன் நிர்மல் ஒன்றரை வருஷம் எங்கள் கூடவே இருந்தார். எப்போது கூப்பிட்டாலும் வருவார். என்ன கேட்டாலும் தருவார் அப்படி ஒரு ஒத்துழைப்பு.இணை தயாரிப்பாளர் நவகுமாரன் தயாரிப்பாளர் போலவே இல்லை. நண்பனாகி விட்டவர்.
வசனம் எழுதியுள்ள தியாகராஜன் பலவகைகளில் உறுதுணையாக இருந்தார். மலேசிய நடிகர் சிவபாலன் எட்டு மாதங்கள் எங்கள் கூடவே இருந்தார். மொத்தத்தில் இப்படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்." என்றார்.

இணை தயாரிப்பாளர் நவ குமாரன் பேசும் போது."மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் உடன் கெய்கர் பிலிம் புரொடக்ஷன்ஸ்இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்பட அனுபவம் மறக்க முடியாத மகிழ்ச்சி அனுபவம். ஒன்றரை வருஷ படப்பிடிப்பு முடிந்து இப்போது இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளது. ஆகஸ்டில் ஆடியோ ரிலீஸ். செப்டம்பரில் படம். இதுதான் திட்டம்" என்றார் சுருக்கமாக.

அடுத்தடுத்து பேசிய இசையமைப்பாளர் எல்.வி. கணேசன், நடன இயக்குநர்கள் சுபாஷ், நவஜீவன், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி, எடிட்டர் மோகன்ராஜ், ஒளிப்பதிவாளர் சக்திவேல், என அனைவரும் கருத்தொருமித்து பேசியது ஒரு மனதாக இப்படத்தில் பணியாற்றியதை புரிய வைத்தது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...