Saturday 19 July 2014

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் "த்ரிஷ்யம்" தமிழ் பதிப்பு படப்பிடிப்பு



ஒயிட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ் குமார் தியியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மோகன்லால் மற்றும் மீனா நடித்து மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமன்றி வசுலில் சக்கைபோடு போட்டது.

நல்ல கதையம்சமும், தெளிவான திரைக்கதையும் இருந்ததால் கன்னடத்திலும் தெலுங்கிலும் தயாராகி, வெளியாகி நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

தற்போது த்ரிஷ்யம் படத்தின் தமிழ் பதிப்பில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கின்றார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம்:

கதை திரைக்கதை இயக்கம்ஜீத்து ஜோசப்

வசனம்எழுத்தாளர் ஜெயமோகன்

ஒளிப்பதிவுசுஜித் வாசுதேவ்

இசை - ஜிப்ரான்

பாடல் வரிகள்நா.முத்துக்குமார்

படத்தொகுப்புஅயூப் கான்

கலை இயக்குனர் - ரெம்போன்

தயாரிப்புஒயிட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பயஸ், ராஜ் குமார் தியியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீப்ரியா ராஜ்குமார்
இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.

வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படபடிப்பு தொடங்கவுள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...