Tuesday 22 July 2014

மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் 'அட்டி'

                            

இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் “திரு . ஜெ, ஜெய கிருஷ்ணன்” அவர்கள் “அரிது அரிது” ,” ஈசா” ஆகிய தமிழ் திரைபடங்களை தயாரித்து உள்ளார். முதன் முறையாக “IMAGINARY MISSIONS” “திரு . கார்த்திகேயன்” அவர்களுடன் இணைந்து “அட்டி” என்கிற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

இயக்குனர் விஜயபாஸ்கர்:

இவர் “மாப்பிள்ளை” , “அலெக்ஸ்பாண்டியன்”, ஆகிய படங்களில், “இயக்குனர் சுராஜ்” அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். முதன் முறையாக இயக்குனராக “அட்டி” என்கிற தமிழ் திரைபடத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

கதாநாயகன்:

இதில் கதாநாயகனாக மா.கா.பா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக அஷ்மிதா, மற்றும் முன்னனி கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கின்றார்.

ஒளிப்பதிவாளர்:

இதன் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன், இவர் “மெய்யழகி” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர். இத்திரைப்படம் அவரின் அடுத்த படைப்பு.

எடிட்டர்:

எடிட்டர் ராஜேஷ், இவர் “வேலையில்லா பட்டதாரி”, “சலீம்” ஆகிய திரைப்படத்தின் படத்தொகுப்பாளார்.

இசை அமைப்பாளார்:

சுந்தர்.சி.பாபு, இவர் “சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “ நாடோடிகள்” ஆகிய வெற்றி படங்களின் இசையமைப்பாளர். இவரின் அடுத்த மாபெரும் வெற்றி படைப்பு “அட்டி”.

பாடல்கள்:

இத்திரைப்படத்தின் பாடல்களை “மதன் கார்க்கி” ,”சினேகன்”, “அண்ணாமலை”,” விஜயசாகர்” , “கவிவர்மன்” மற்றும் “கானா வினோத்” ஆகிய முன்னனி பாடல் ஆசிரியர்கள் பாடல்களை எழுதி உள்ளனர்.

சண்டை பயிற்சி இயக்குனர் பவர் பாண்டியன்:

முன்னனி கதாநாயகர்களின் சண்டைப் பயிற்சி ஆசானாக விளங்கும் “திரு . பவர் பாண்டியன் மாஸ்டர்” , இதில் சண்டை பயிற்சி இயக்குனராக பணிபுரிகிறார்.

கதை சுருக்கம்:

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் நன்பர்கள் பற்றிய கதை. சந்தோஷமாக வாழ்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை சாதூர்யமாக எப்படி கதாநாயகன் சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சித்தரிக்கும் பொழுதுபோக்கு திரைப்படம்...

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...