Thursday 3 July 2014

ஜூன் 11ல் வெளிவரும் பப்பாளி


S. அம்பேத்குமார் - A .ரஞ்ஜீவ்மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் படம் ‘’பப்பாளி’’

இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக இஷாரா நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார் மற்றும் இளவரசு , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி , ஜெகன் ,கிருஷ்ணமூர்த்தி , கௌரவ வேடத்தில் நிரோஷ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - விஜய். இசை - விஜய் எபிநேசர். பாடல்கள் - யுகபாரதி. கலை - விஜயகுமார், நடனம் - அசோக்ராஜா. எடிட்டிங் - அத்தியப்பன் சிவா

தயாரிப்பு - S .அம்பேத் குமார் , A . ரஞ்ஜீவ்மேனன்

கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் - A .கோவிந்தமூர்த்தி.


படம் பற்றி இயக்குனர் A.கோவிந்தமூர்த்தி கூறியதாவது...

மாமியார் என்றாலே கொடுமைக்காரியாக சித்தரிக்கப் பட்ட சினிமாவில், நல்லவர்களாக சித்தரித்திருக்கிறோம் எங்களது படத்தில் நடித்த சரண்யா இனிமேல் நல்ல அம்மா மட்டுமல்ல..நல்ல மாமியார் என்று பாராட்டப் படுவார்.

படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதும், எடுத்துக்கு கொள்கிற லட்சியத்தை அடைய எந்த தடைக் கற்களையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற கருத்தையும் இதில் பதிவு செய்திருக்கிறோம்.

நல்ல கருத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

நிச்சயம் ரசிக்கும் படியான படமாக “ பப்பாளி “ இருக்கும் என்றார் இயக்குனர் A.கோவிந்தமூர்த்தி படம் இம்மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


 
 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...