Monday 23 June 2014

“காமராஜ்” படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி


பாலகிருஷ்ணன் இயக்கத்தில் “காமராஜ்” படத்தில்முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

2004 ம் ஆண்டு திரைக்கு வந்து பலராலும் பாராட்டப் பட்ட “காமராஜ்” திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப் பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழிற் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு சேர்த்துள்ளனர்.

காமராஜ் வேடத்தில் பிரதீப்மதுரம் நடித்திருக்கிறார்.முக்கிய வேடத்தில் சாருஹாசன், வீ.எஸ்.ராகவன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி.இவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் விரைவில் படமாக்கப் பட உள்ளது.

எம்.எம்.ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எடிட்டிங் - வி.டி.விஜயன்

கலை - ஈஸ்வர்

எழுதி இயக்கி இருப்பவர் பாலகிருஷ்ணன்

தயாரிப்பு - ரமணா கம்யூனிகேசன்ஸ்.

புதுப் பொலிவுடன் காமராஜ் படம் காமராஜரின் 112 வது பிறந்த நாளான 11.07.2014 அன்று இந்தியா முழுவது திரையிடப் பட உள்ளதாக இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...