Monday 16 June 2014

2014 ம்ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது


ஹரீஷ் - நேகா நடிக்கும் “காதல் 2014” 

புது இயக்குனர் சுகந்தன் அறிமுகம் 

சரவணா பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “காதல்2014” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் “முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மாத்தியோசி படங்களில் நடித்த ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நேகா நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” படத்தில் அறிமுகமான மணிகண்டன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அப்புக்குட்டி, பசங்க சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜபாண்டி, ஷிவாணி, சேலம் சின்ன கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ரித்தீஷ்கண்ணா

விவேகா, லலிதானந்த், சுகந்தன் பாடல்களுக்கு பைசல் இசையமைக்கிறார்.

கலை - சுந்தர்ராஜன் , நடனம் - தினா, ராதிகா, சதீஷ் , எடிட்டிங் - சங்கர்

தயாரிப்பு நிர்வாகம் - ராம்சங்கர் , தயாரிப்பு மேற்பார்வை - ராமமூர்த்தி

இணை தயாரிப்பு - R.L.ஏசுதாஸ், R.Y.சஜீத்

தயாரிப்பு - B.சுதாகர்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுகந்தன். இவர் சேரனிடம் “ஆட்டோகிராப்” படம் வரை உதவியாளராக பணியாற்றியவர். அத்துடன் பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் சுகந்தனிடம் கேட்டோம்... காதல் என்பது புனிதமானது தான்.. ஒவ்வொரு கலாகட்டதிலும் மாறி வந்த காதல் இன்றைய காலகட்டத்தில் அதாவது 2014 ம்ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது மாறி வந்த காதலால் இன்றைய காதலர்கள் சந்திக்கு நல்லது கெட்டது பற்றி இந்த படத்தில் கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்.

படபிடிப்பு முழுவது சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

காதல் 2014 - படம் காலம் கடந்து பேசப்படும் படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சுகந்தன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...